Saturday, January 05, 2008





   

Sunday, September 09, 2007

Wednesday, August 08, 2007

ஃபலஸ்தீனை வெற்றிக்கொள்ளல் இஃவான்களின் முடிவுறாத போராட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஃபலஸ்தீனை வெற்றிக்கொள்ளல் இஃவான்களின் முடிவுறாத போராட்டம்

ஃபலஸ்தீன்,உலக முஸ்லிம்களின் அகீதாவோடு தொடர்புப்பட்டபூமி.அல்குர் ஆன் அதனை பறக்கத்ச்செய்யப்பட்டது என்கின்றது.நபிமார்களின் அனைவரது போராட்டத்திலும் ஃபலஸ்தீனுக்கு ஒரு முக்கிய இடம் இருந்திருக்கின்றது.உலகை ஆட்சிச்செய்த அனைத்து சமூகங்களும் ஃபலஸ்தீனை தமது ஆளுகைக்குள்க்கொண்டுவருவதற்காக கடும் பிரயத்தனங்கள் செய்திருக்கின்றன.ஏனெனில் ஃபலஸ்தீனை தம் கைவசம் வைத்திருக்கும் சமூகம் தான் உலகிற்கு தலைமையினை வழங்கியிருக்கின்றது.

அந்தவகையில் இஸ்ரா நிகழ்வுடன் ஃபலஸ்தீன் பூமியின் தலைமை நபியவர்களிடம் அல்லாஹ்தாஅலாவால் ஒப்படைக்கப்பட்டது.அந்த நம்பிக்கையின் விளைவால்தான் ஃபாலஸ்தீனை நோக்கிய படையெடுப்புகள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.இறுதியில் உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஃபலஸ்தீன் முழுமையாக முஸ்லிம்களிடம் வருகிறது.

இடைக்காலத்தில் சில வருடங்கள் முஸ்லிம்களிடமிருந்து ஃபலஸ்தீன் கிறிஸ்தவர்கள் கைக்கு நகர்ந்திருந்தாலு, ஸலாஹூத்தீன் அய்யூபியின் காரணமாக மீண்டும் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கைக்கு வருகிறது.அன்று முதல் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளில்தான் இருந்திருக்கிறது.1948 மே மாதம் 15-ம் திகதியுடன் உத்தியோக பூர்வமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதுடன் பைத்துல்முகத்தஸ் உட்பட ஃபலஸ்தீனின் பெரும்பகுதி முஸ்லிம்களை விட்டுச்செல்கிறது.
ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் அகீதாவில் ஒரு பகுதி,அது விட்டுக் கொடுக்கப்படக்கூடாது-இஸ்லாமிய உலகின் இதயத்தில் ஒரு யூத நாடு தோன்றிவிடக்கூடாது என்ற ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அது தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தவரின் போராட்டம்.இன்று வரை தொடரும் போராட்டம்.ஃபலஸ்தீன் முழுமையாக மீட்கப்படும் வரை நடைப்பெறப்போகும் போராட்டம்.
ஃபாலஸ்தீன விவகாரத்தில் இவர்கள் ஆரம்பமுதலே கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.1930 களில் ஃபாலஸ்தீன விவகாரத்திற்கான் தனிப்பிரிவு இஃவான்களில் உருவாக்கப்பட்டது.அதன் விளைவாக 1936ம் ஆண்டு புரட்சியில் அமீன் ஹுசைனியுடன் பல இஃவான்கள் பங்குப்பற்றினர்.தொடர்ந்து, 1938ஆம் ஆண்டு நடைப்பட்ட இஸ்ஸுத்தீன் கஸ்ஸாம் புரட்சியுலும் பல இஃவான்கள் கலந்துக்கொண்டனர்.பின்னர் ஃபலஸ்தீனுக்குள்ளேயே இருந்து செயல்படும் நோக்கில் 1946ஆம் ஆண்டு இஃவான்களது கிளை ஒன்று ஃபலஸ்தீனில் உருவாக்கப்பட்டது.அதன் தலைவராக ஜமால் ஹுசைனி என்பவர் நியமிக்கப்பட்டார்.

மறுபுறத்தில் எகிப்துக்குள்ளே யூதர்களின் நடவடிக்கைகல் பலம் பெறத்தொடங்கின.1943ஆம் ஆண்டு எகிப்தில் சியோனிச இயக்கத்தின் பிரிவு அரச அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது.1944ஆம் ஆண்டு அலெக்சாந்திரியாவில் நடைப்பெற்ற அவர்களது மாநாட்டில் சாமாதானத்தில் மூலமோ அல்லது யுத்தத்தின் மூலமோ இஸ்ரேல் உருவாகியே தீரும் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள்.எகிப்தின் கம்பெனிகளில் 40 வீதமானவறை யூதர்களே தம் வசம் வைத்திருந்தார்கள்.இந்த அபாயகரமான நிலையை எதிர்த்து இஃவான்கள் மாத்திரமே போர்க்கொடி தூக்கினார்கள்.

இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானிய அரசு எகிப்திய யூதக்கம்பெனிகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான யூதர்களை ஆயுத ரீதியாக பயிற்றுவித்தது.அப்போது இஃவான்கள் மாத்திரமே தமது உரைகள் ஊடாகவும் துண்டு பிரசுரங்கள்,புத்தகங்கள் ஊடாகவும் இந்தக்கம்பெனிகளின் உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள்.பல மாநாடுகளை நடத்தினார்கள்.அறபுத்தலைவர்களை உசுப்பிவிட்டார்கள்.

இதன் விளைவாக ஃபலஸ்தீனுக்கான முதலாவது அறபு மாநாடு நடைப்பெற்றது.அதன் விளைவாக அறபு நாடுகளை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டது.எனவே லண்டனில் அறபிகளையும் யூதர்களையும் இணைத்து வட்டமேஜை மாநாட்டை நடத்தினார்கள்.அதில் ஃபலஸ்தீனுக்குள்ளே யூதர்கள் மேற்க்கொள்ளும் சிறைப்பிடிப்புகளும் சித்திரவதைகளும் கொலைகளும் நிறுத்தப்படுவதற்கு உத்திரவாதம் தரப்பட்டது.அத்துடன் வெளியிடங்களிலிருந்து யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு வருவதில் ஒரு வரையறை இடப்பட்டது.

இதனை யூதர்கள் அங்கீகரிக்கவில்லை.உடனே பிரித்தானியாவை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் போய் உதவிக்கேட்டார்கள்.அதன் விளைவாக,அமெரிக்க-பிரித்தானிய நட்புறவு சபை உருவாக்கப்பட்டு அதன் தீர்மானத்தின் பிரகாரம் உடனடியாக ஒரு லட்சம் யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு அனுப்பப்பட அனுமதிக்கப்பட்டது.அத்துடன் யூதர்கள் ஃபலஸ்தீன நிலங்களை வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.

தொடர்ந்தும் 1947 நவம்பர் 29ஆம் திகதி அமெரிக்க,பிரித்தானிய அழுத்தத்தின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை ஃபலஸ்தீனை இரண்டு நாடுகளாக பிரிக்கும் தீர்மானத்தை வெளியிட்டது.ஒன்று யூதர்களுக்குரியது.மற்றையது அறபிகளுக்குரியது.இத்தீர்மானத்தை அறபுத்தலைவர்கள் எதிர்த்தார்கள்.

இஃவான்கள் ஒரு பெரும் எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள்.அதில் சவூதி அரேபியா,எகிப்து,சிரியா,சூடான் போன்ற நாடுகளின் பல அறிஞர்கள் கலந்துக்கொண்டனர்.அந்த மாநாட்டில் உரையாற்றிய இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள்,"ஃபலஸ்தீனே எமது இரத்தங்கள் உனக்கு அர்ப்பணமாகட்டும், இந்த மேடைமீது நின்று நான் உரத்துச்சொல்கிறேன்.இஃவான்களில் பத்தாயிரம் பேர் ஃபலஸ்தீனில் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக தயாராக இருக்கிறார்கள்.அவர்கள் அழைப்பை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்"என்று அறிவிப்புச்செய்தார்கள்.மாநாட்டின் நிறைவில் ஃபலஸ்தீனைக்காப்பதற்கான உயர்சபை ஒன்று உருவாக்கப்பட்டது.அதில் இமாமவர்களும் அங்கத்துவம் வகித்தார்கள்.அவர்கள் ஃபலஸ்தீன போரட்டத்திற்கான ஆயுதங்களையும் நிதியையும் திரட்டுவதில் மும்முரமாக ஈடுப்பட்டார்கள்.

1948ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி இஃவான்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தார்கள்.ஒவ்வொரு அங்கத்தவனும் ஜிஹாதிற்காக தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதை கடகையாக்கினார்கள்.இஃவான்களின் இந்த உறுதியைக்கண்ட பல தலைவர்களும் அவர்களுடன் ஒத்துழைக்க முன்வந்தார்கள்.எகிப்திய அரசப்படையில் இருந்த பல தளபதிகள் தமது தொழிலை ராஜினாமாச்செய்துவிட்டு இஃவான்களது படையில் வந்து இணைந்துக்கொண்டனர்.

இஃவான்களின் இராணுவ பயிற்சி சிரியாவில் நடைப்பெற்றது.அது முஸ்தபாஸிபாஈ,உமர் பாஹாவுத்தீன் அல் அமீரி,முஹம்மத் ஹாமித்,அப்துல்லாஹ் ஹில்லாக் போன்ற அன்றைய முக்கிய இஃவான்களின் தலைவர்களினது மேற்ப்பார்வையில் நடைப்பெற்றது.உண்மையில் இந்த தலைவர்கள் நேரடியாக யுத்தத்தில் ஆயுதம் ஏந்திப்போராடினார்கள்.

சிரியாவிலிருந்து வந்த படைக்கு முஸ்தபா ஸிபாஈ தலைமைத்தாங்கினார்கள்.ஜோர்தானிலிருந்து வந்த படைக்கு அப்துல் லதீப் அபூகூரஃ தலைமை தாங்கினார்கள்.ஈராக்கிலிருந்து வந்த படைக்கு முஹம்மத் மஹ்மூத் ஸவ்வாப் டலைமை தாங்கினார்கள்.இவர்கள் தான் அன்றைய நாளில் அந்த நாடுகளில் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களாகவும் காணப்பட்டார்கள்.

யுத்தம் நடைபெறுகின்றபோது, முஸ்தபா ஸிபாஈ அவர்களை ஏனையவர்கள்,அவர் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாமல் தலைமையகத்தில் இருந்துக்கொண்டு மேற்பார்வை செய்தால் போதுமானது என்றார்கள்.நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்ட முன் அனுபவங்கள் அவருக்கு குறைவு என்பதே காரணம்.ஆனாலும் அதனை மறுதலித்த முஸ்தபாஸிபாஈ அவர்கள் "நான் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக வேண்டுமென்பதற்காவன்றி வேறு எதற்காகவும் இங்கு வரவில்லை."என்றார்.எனவே அவரும் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டார்.

உண்மையில் 1948ஆம் ஆண்டு யுத்தத்தில் இஃவான்கள் காட்டிய வீரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.மிகக்குறைந்த மனித வளங்களுடனும் மிகக் குறைந்த ஆயுதங்களுடனும்-ஆனால் மிக உயர்ந்த ஈமானுடனும் அவர்கள் போராடினார்கள்.எனவே தான் அவர்கள் ஏனையவர்களை விட அதிகமாக சாதித்தார்கள்.

தபத்86 என்னும் இடத்தை கைப்பற்றுவதற்கான போராட்டம் இடற்கு சான்றாக உள்ளது.எகிப்திய படையினர் 3ஆயிரம் பேருடன் மூன்று நாட்களாக போராடினார்கள்.வெற்றிக்கிடைக்கவில்லை.படைத்தளபதி முஹம்மது நஜீப் என்பவர் கூட போராட்டத்தில் காயப்பட்டார்.மூன்றாம் நாள் முடிவில் அவர்கள் இஃவான்களிடம் உதவிக்கேட்டார்கள்.இஃவான்கள் 50 பேரை மாத்திரம் அனுப்பிவைத்தார்கள்.அவர்கள் படையின் முன்னணியில் நின்று போராடினார்கள்.ஒரே நாளில் அந்த இடம் கைப்பற்றப்பட்டது.யூதர்கள் விரண்டோடினார்கள்.

1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி திடீரன யுத்த நிறுத்தத்திற்கு அறபுத்தலைவர்கள் உடன்ப்பட்டுவிட்டார்கள்.,ஃபலஸ்தீனில் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு இது பேரதிற்சியைக்கொடுத்தது.முஸ்லிம்கள் வெற்றியின் உச்சத்தில் நிற்கின்றபோது முழுமையான வெற்றியைபெறுமுன்னர் ஏன் இந்த யுத்த நிறுத்தம்?

யூதர்கள் தமக்குத்தேவையான் ஆயுதங்களை வரவழைத்துக்கொள்வதற்கானஒரு வாய்ப்பாகவே இந்த யுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபைக் கொண்டுவந்தது.இமாம் ஹஸ்னுல் பன்னா அவர்கள் விரைந்துச் செயல்ப்பட்டார்கள்.அறபுத்தலைவர்களுக்கு இந்த விடையத்தை தெளிவுப்படுத்த முற்ப்பட்டார்கள்.விளைவாக யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போதிலும் அது நீடிக்கவில்லை.

இரண்டாவது தடவையாகவும் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.இந்தத் தடவை யூதர்கள் நவீனகரமான ஆயுதங்களைக்கொண்டு குவித்தார்கள்.யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளபோதே அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாது,புதிய ஆயுதங்கள் கொடுத்த தைரியத்தில் முஸ்லிம்களை கொடூரமாக தாக்கத்தொடங்கினார்கள்.முஸ்லிம்களுக்கு ஆயுதங்களைக்கொண்டு சேர்ப்பதற்கு அறபுத்தலைவர்களே தடையாக இருந்தார்கள்.சில பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் படைகள் பலவந்தமாய் வாபஸ் வாங்க வைக்கப்பட்டன.


எகிப்திய இஃவான்களின் படையினர் மேலக பயிற்சி என்ற போர்வையில் ஒன்று திரட்டப்பட்டு,அவர்கள் அனைவரும் கைதுச்செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.யூதர்கள் இஃவான்களில் கைதாவோரை சராசரி கைதியாக கருதாமல் போர்க்குற்றவாளிகள் என்றுக்கூறி கொடூரமாகக்கொலைச்செய்தார்கள்.இறுதியில் இதுப்போன்ற சதிகளின் விளைவாக முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்குமுன்னால் தோற்றுப்போனார்கள்.ஃபலஸ்தீன் பரிதாபமாய் ஆக்கிரமிக்கும் யூதர்களின் கைகளில் விழுந்தது.
இந்த யுத்தம்தான்,உலகிற்கு இஃவான்களின் பலத்தை அறிய வைத்தது.இதன் பின்னர்தான் இமாம் ஹஸனுல் பன்னா கொலைச்செய்யப்படவேண்டும் என்ற தீர்மானத்த்ற்கு மேற்குலகம் வந்தது.1948ஆம் ஆண்டு "ரோஸ் காரீப்" எனும் யூதப்பெண் பத்திரிகையாளர் ஒருவர் "சண்டே மிரர்"எனும் பத்திரகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இஃவான்களைப்பற்றி இவ்வாறு எழுதுகிறாள்:தற்ப்பொழுது இஃவானுல் முஸ்லிமூன் என்னும் ஈர்ப்புமிக்க இந்தப்பெயருக்குப்பின்னால் அள்ள அந்த மனிதர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.தற்போது ஃபலஸ்தீனில் உள்ள யூதர்கள்தான் இவர்களது மிகப்பெரிய எதிரிகள்.யூதர்கள்தான் இவர்களது அடிப்படை இலக்கு.மத்திய கிழக்கின் பல நகரங்களில் இதன் அங்கத்தவர்கள் யூதர்களின் சொத்துகளை அழிக்கத்தொடங்கிவிட்டார்கள்.அவர்கள் தற்ப்பொழுது பஹ்ரைனிலும் யெமனிலும் யூதர்கள் மீது அத்துமீற ஆயத்தமாகிறார்கள்.அவர்கள்தான் அமெரிக்கக் கவுன்சில்களை தாக்கியவர்கள்.

பகிரங்கமாகவே அறபு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேறவேண்டும் எனக்கேட்டுள்ளனர்.ஃபலஸ்தீனிலுள்ள யூத நாடு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்ப்பார்ப்பது நாட்டை இரண்டாகப்பிரிக்கும் அதன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் சர்வதேசப் படைகளையல்ல.மாற்றமாக இஃவனுல்முஸ்லிமூன்களை நேருக்கு நேர் நின்று எதிர்க்கத்தகுதியானபடைகளைத்தான் எதிர்ப்பாக்கிறார்கள்.இந்த இயக்கத்தின் பெயரில் இருக்கும் அடிப்படை அபாயத்தை உலகம் அறிந்துக்கொள்ளவேண்டும்.

"மிக அவசரமாக உலகம் அந்த உண்மையை உணர்ந்துக்கொள்ளவில்லையெனின், ஐரோப்பா இந்த நூற்றாண்டின் கடந்த நாட்களில் நாஸிஸ இயக்கத்திடம் கண்டதை இங்கேயும் காணவேண்டியிருக்கும்.வட அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரையிலும்-துருக்கி முதல் இந்தியாவரையிலும் பரந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஐரோப்பா எதிர்க்கொள்ள வேண்டியிவரும்."

இவை யூதப்பெண் எழுத்தாளர் ஒருவரின் வார்த்தைகள்.மிகப்பெரிய உண்மைகள் விஷம் கலந்து தரப்பட்டிருக்கின்றன.இந்த உண்மைகள் ஃபலஸ்தீன் விவகாரத்தில் இஃவான்களின் பாரிய பங்களிப்புகளுக்கு போதிய சான்றுகளாகும்.இஃவான்கள் ஒரு பெரும் சக்தி என்பதை அன்றே அங்கீகரித்துவிட்டனர்.அவர்களால்தான் ஃபலஸ்தீனும் உலகின் செல்வாக்கும் மேற்குலகிற்கு கிடைக்காமல் போக முடியும் என்றுக் கண்டனர்.எனவேதான் இன்று வரைக்கும் மேற்குலகின் பிரதான எதிரியாக அவர்கள் பார்க்கப்படுகின்றனர்.அல்லாஹ் அவர்களை வெற்றிப்பெறச்செய்வானாக.

நன்றி: மீள்ப்பார்வை மே 2007

Tuesday, July 03, 2007

தடையை மீறி ஹிஜாப் பிரச்சாரம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தடைகளை தாண்டி ஹிஜாபிற்காக பிரச்சாரம்

"துருக்கியில் ஹிஜாப் என்பது வெறும் தலையை மறைக்கும் ஒரு துண்டு துணியல்ல, மாறாக அது ஒரு சமூக அரசியல் பிரச்சனையாக மாறிவிட்டது"-துருக்கியின் அரப் பத்திரிகையாளர் ரானியா ஷுஃபி கூறுகிறார்.இவர் துருக்கி முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பைப்பெற்றவர்.

துருக்கியில் அரசாங்கத்தின் கடுமையான தடையிருந்தும் ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.துருக்கியில் தற்ப்பொழுது 70% பெண்களும் பர்தா அணிகின்றார்கள்.

அரபு நாடுகள் பலவற்றிலும் ஹிஜாப் முஸ்லீம் பெண்கள் அணியும் ஒரு பாரம்பரிய ஆடையாக இருப்பதால் அதனை சிலர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அணியலாம்.ஆனால் துருக்கியின் நிலையோ வேறு.இங்கு ஹிஜாப் அணிந்தால் கைதுச்செய்யப்படலாம் அல்லது தண்டிக்கப்படலாம் என்ற கடுமையான நிலையிருந்தும் அந்தப்பெண்கள் ஹிஜாப் அணிவதையே விரும்புகிறார்கள்.

23 வயதுடைய ஃபாத்திமா கதானிகஷிற்கு ஹிஜாப் அணிந்ததால் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டது.அதனால் அவருக்கு வருத்தமில்லை."அதிகாரத்தை கையில் வைத்திருப்போருக்கு என்னுடைய பல்கலைகழக அனுமதியை வேண்டுமென்றால் மறுக்கலாம் ஆனல் என்னுடைய வாழ்க்கைப்பயணத்தை அவர்களால் தடைச்செய்யமுடியாது"என்கிறார் அவர்.

அரசாங்கத்தின் கடும் தடைக்காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் பல்கலை கழக கல்வி பயல்வது அஸர்பைஜான் போன்ற பக்கத்து நாடுகளில்.பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகானின் பெண்மக்கள் ஹ்ஜாப் காரணமாக கல்வி பயில்வது அமெரிக்காவில்.அவருடைய மனைவி தலைமறைப்பதற்குக்கூட அங்குள்ள ராணுவத்தலைமை எதிர்ப்புத்தெரிவிக்கிறது.

துர்க்கியில் இன்னொரு காட்சியையும் காணலாம் அது கல்விகூடங்களிலும் அலுவலகங்களிலும் வரும் பெண்கள் உள்ளேச்செல்லும்பொழுது ஹிஜாபைக்கழற்றிவிட்டுச்செல்வதும் வெளியே வரும்போது அணிவதும்தான்.இதனால் மதவிரோதிகளின் அனுதாபத்தையும் இவர்கள் பெற்றுவிட்டார்கள்.1997 பிப்ரவரி 28 அன்று நஜ்முதீன் அர்பகானின் ஆட்சியை கலைத்துவிட்டபிறகு ஹிஜாப் அணிவது துருக்கியில் அரசு அலுவலங்களிலும் கல்விக்கூடங்களிலும் தடைச்செய்யப்பட்டது.

Monday, July 02, 2007

ISLAMIC PERSONALITY

BISMILLAHIRRAHUMANIRRAHEEM


Allama Mohammed Iqbal


Birth:
Iqbal was born in the Punjab on February 22, 1873. His ancestors, who were Kashmiri Brahmins, had embraced Islam two hundred years earlier. Iqbal's own father was a devout Muslim with Sufistic bent of mind. Primary Education He received his early education in Sialkot. After passing the entrance examination, he joined Intermediary College. Mir Hassan, a great oriental scholar, had a special aptitude for imparting his own literary taste and to his students. Under his influence, Iqbal was drawn towards Islamic studies, which he regarded to be an outstanding favor that he could not forget it all his life. Higher Education Passing on to the Government College of Lahore, Iqbal did his graduation with English Literature, Philosophy and Arabic as his subjects. At the college he met Prof. Arnold and Sir Abdul Qadir. Iqbal's poem, Chand (moon) and other early poems appeared in the journal (which belonged to Sir Abdul Qadir) in 1901 and were acclaimed by critics as cutting a new path in Urdu poetry. It did not take him long to win recognition as a rising star on the firmament of Urdu literature. In the mean time he had done his MA in Philosophy and was appointed as a Lecturer in History, Philosophy and Political science at Oriental College, Lahore. He then moved to Government College to teach Philosophy and English Literature. Wherever Iqbal worked or thought his versatility and scholarship made a deep impression on those around him. In Europe Iqbal proceeded to Europe for higher studies in 1905 and stayed there for three years. He took the Honors Degree in Philosophy and taught Arabic at the Cambridge University in the absence of Prof. Arnold. From England, he went to Germany to do his doctorate in Philosophy from Munich and then returned to London to qualify for the bar. He also served as a teacher in the London school of Commerce and passed the Honors Examination in Economics and Political Science. During his stay in Europe Iqbal not only read voraciously but also wrote and lectured on Islamic subjects which added to his popularity and fame in literary circles. Back in India Iqbal returned to India in 1908. The poet had won all these academic laurels by the time he was 32 or 33. He practiced as a lawyer from 1908 to 1934, when ill health compelled him to give up his practice. In fact, his heart was not in it and he devoted more time to philosophy and literature than to legal profession. He attended the meetings of Anjuman Himayat-I-Islam regularly at Lahore. The epoch making poems, Shikwa and Jawab-e-Shikwa, which he read out in the annual convention of it one year after another, sparkled with the glow of his genius and made him immensely popular. They became the national songs of Millet. Iqbal's other poems Tarana-e-Hind (The Indian anthem) and Tarana-e-Milli (the Muslim Anthem) also became very popular among masses and used to be sung as symbols of National or Muslim identity at public meetings. The spirit of Change The Balkan wars and the Battle of Tripoli, in 1910, shook Iqbal powerfully and inflicted a deep wound upon his heart. In his mood of anger and frustration, he wrote a number of stirring poems, which together with portraying the anguish of Muslims were severely critical of the West. The spirit of change is evident in poems like Bilad-e-Islamia (the lands of Islam), Wataniat (Nationalism), Muslim, Fatima Bint Abdullah (who was killed in the siege of Cyrainca, Siddiq, Bilal, Tahzib-e-Hazir (Modern civilization) and Huzoor-e-Risalat Maab Mein (in the presence of Sacred Prophet). In these poems, Iqbal deplores the attitude of Muslim leaders who lay a claim to Islamic leadership and yet are devoid of a genuine spiritual attachment to the blessed Prophet. The turning point in Iqbal's Life Iqbal was shaken by the tragic events of World War I and the disaster the Muslims had to face. The genius had passed through the formative period. He had attained maturity as a poet, thinker, seer and crusader who could read the signs of tomorrow in the happenings of today, make predictions, present hard facts and unravel abstruse truths through the medium of poetry and ignite the flame of faith, Selfhood and courage by his own intensity of feeling and force of expression. Khizr-e-Raah (The Guide) occupies the place of pride among the poems he wrote during this period. Bang-e-Dara (The caravan bell) published in 1929 has held a place of honor in Urdu poetry and world poetry. Iqbal preferred Persian for poetic expression because its circle was wider than that of Urdu in Muslim India. His Persian works, Asrar-e-khudi (Secrets of the self), Rumuz-e-Bekhudi (Mysteries of Selflessness), Payam-e-Mashriq (Message of the East), Javed Nama (The Song of Eternity) belong to the same period of his life. And so is Reconstruction of Religious Thoughts in Islam, which was extensively appreciated and translated into many languages. Academies were set up in Italy and Germany for the study of Iqbal's poetry and philosophy. Politics In 1927 the poet was elected to the Punjab Legislative assembly. In 1930, he was elected to preside over at the annual session of Muslim League. In his presidential address at Allahabad, Iqbal for the first time introduced the idea of Pakistan. In 1930-31, he attended the Round Table conference, which met in London to frame a constitution for India. In Spain While in England, Iqbal accepted the hospitality of Spain. He also went to Cordoba and had the distinction of being the first Muslim to offer prayers at its historical mosque after the exile of Moors. Memories of the past glory of Arabs and their 800-year rule over Spain were revived in his mind and his emotions were aroused by what he saw. Meeting with Mussolini In Italy Iqbal was received by Mussolini who had read some of his works and was aquatinted with his philosophy. They had long meetings and talked freely to each other. The Universities of Cambridge, Rome and Madrid and the Roman Royal society organized meetings in his honor. On his way back he also went to Jerusalem to attend the International Conference of Motamar-i-Isalami. In Afghanistan At the invitation of King Nadir Shah, Iqbal visited Afghanistan in 1932. The king received the poet with great honor and met hi privately, as well during which he laid bare his heart. The two talked and wept. Iqbal's Death The last phase of Iqbal's life was embittered with constant illness. But as regards his creative activities this product was most productive. He kept in touch with every question of the day and continued composing beautiful verses. A few minutes before his death he recited these touching lines: The departed melody may return or not! The zephyr from Hijaz may blow again or not! The days of this Faqir has come to an end, Another seer may come or not! Although Iqbal's was long and protracted the end was sudden and very peaceful. He breathed his last in the early hours of April 21, 1938, in the arms of his old and devoted servant, leaving behind a host of mourners all over the Islamic world. There was a faint smile playing on his lips, which irresistibly reminded one of the last criterions, which he laid down for a truthful Muslim (Mumin). I tell you the sign of a Mumin- When death comes there is smile on his lips.

Sunday, June 10, 2007

இஃவான்கள் இலக்கை அடைவார்களா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இஃவான்கள் இலக்கை அடைவார்களா?

நபியவர்கள் கூறினார்கள்"அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பிவைக்கிறான்"(அபூதாவூத்)
புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்றபோது,மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல்,மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டுவருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி).அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்றபோது,மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.


இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றையொன்று முழுமைப்படுத்துவதாகவே காணப்படுகின்றன.அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது இஸ்லாம்ப்பற்றிய புரிதல் அதன் மூலமாக அல்குர் ஆன் சுன்னாவிற்கு மீளல்.அதாவது எந்தக்கலப்புமின்றி குர் ஆன் சுன்னாவிலிருந்து தூயவடிவில் இஸ்லாத்தை விளங்கி அதனை நாம் வாழ்கின்ற காலத்தின் பாஷையில்,வடிவத்தில், இயல்பில் நடைமுறைப்படுத்தல் எனப்பொருள்படும்.
அந்தவகையில் புனர்நிர்மாணம் என்பது நபியவர்களது தாஃவா இந்த உலகில் எதை சாதிக்க நினைத்ததுவோ அல்லது சாதித்ததுவோ அதனை மீண்டும் இந்த உலகில் சாதித்துக்காட்டுவதுதான் புனர்நிர்மாணமாகும். நபியவர்களது தாஃவா, இஸ்லாத்திற்கான முதல் நிர்மாணம் அதனை புனர்நிர்மாணம் செய்வதென்பது அதே பணியை மீண்டும் மேற்க்கொண்டு அதே இலக்கை அடைதல் என்பதாகும்.நபியவர்களது தாஃவாவின் இலக்கு என்ன? முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுதல்,அவர்களுக்கு தலைமையை வழங்குதல்,இந்த முழு உலகமும் இஸ்லாத்தின் வழிக்காட்டுதலில் இயங்கவேண்டும் என்பதே.இதுதான் நபியவர்களது பணி. இதைத்தான் அல்குர் ஆன் இவ்வாறுக்குறிப்பிடுகிறது
“இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்;.பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன்.”( அல்குர் ஆன்22:78)
நபியவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை.முஸ்லிம்கள் மனித சமூகத்தின் தலைமை.அதற்காகத்தான் அல்லாஹ் முஸ்லிம்களைத்தேர்வுச்செய்தான் என்கிறது இந்த அல்குர் ஆன் வசனம்.

உலகிற்கு வழிகாட்டி தலைமையை வழங்கும் இந்தப்பணிக்காகத்தான் கிலாபத் அவசியப்பட்டது.தலைமையை வழங்கும் அதிகார மிக்க இடம்தான் கிலாபத்.ந்பியவர்களின் முதல் நிர்மாணம் இந்த இலக்கை அடைந்தது.பின்னர் நீண்ட காலம் உலகிற்கு வழிக்காட்டித்தலைமையை வழங்கியது.ஆனால் 1924ம் ஆண்டுடன் அது சரிந்து வீழ்ந்தது.
இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது.அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும்.அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது.

1928ம் ஆண்டு மார்ச் மாதம்,நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்;காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது.நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது,எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று,சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது.அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது.இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப்போன்று பலப்பிரச்சனைகளைக்கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி?நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.ஆனால் என்னச்செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது.நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா?என்றுக்கேட்டார்கள்.அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள்.அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வுகள் நடந்துமுடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக்காணப்படுகிறது.இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப்பணி அதன் உச்சத்தை அடைந்திருக்கவேண்டும்.அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற,அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா?இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப்போகிறது.அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக்கேளுங்கள்:"
“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.”( அல்குர் ஆன்2:261)
இஸ்லாமிய தாஃவா என்பது,அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது.எழு நூறு மடங்கு விளைவைத்தரக்கூடியது.இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள்.சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப்பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்?அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச்செய்யும் நாண்யங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப்பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது?அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச்செய்யும் நேரங்கள்,மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப்போகிறது?அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச்செய்யும் நேரங்கள்,மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப்பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.
எவ்வளவு தொகை காணப்படப்போகிறது?அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச்செய்யும் நேரங்கள்,மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப்பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக,தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்காபோகிறது.அதற்கான் பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது.அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

நன்றி:மீள்ப்பார்வை ஏப்ரல் 2007.

Saturday, June 02, 2007

GREAT PEOPLE OF ISLAMIC REVIVAL

BISMILLAHIRRAHUMANIRRAHEEM

Hasan Al-Banna

Guilain Denoelcxhttp://www.americanmuslim.org/1biography1.html
Hasan al-Banna was the founder of the Muslim Brotherhood or Society of the Muslim Brothers, the largest and most influential Sunni revivalist organization in the 20th century. Created in Egypt in 1928, the Muslim Brotherhood became the first mass-based, overtly political movement to oppose the ascendancy of secular and Western ideas in the Middle East. The brotherhood saw in these ideas the root of the decay of Islamic societies in the modern world, and advocated a return to Islam as a solution to the ills that had befallen Muslim societies. Al-Banna's leadership was critical to the spectacular growth of the brotherhood during the 1930s and 1940s. By the early 1950s, branches had been established in Syria, Sudan, and Jordan. Soon, the movement's influence would be felt in places as far away as the Gulf and non-Arab countries such as Iran, Pakistan, Indonesia, and Malaysia. Driving this expansion was the appeal of the organizational model embodied in the original, Egypt-based section of the brotherhood, and the success of al-Banna's writings. Translated into several languages, these writings have shaped two generations of Sunni religious activists across the Islamic world.
Like many of the Islamic leaders who followed in his footsteps, Al-Banna enjoyed the benefits of a modern education, but had been raised in a traditional Islamic environment. He was born in 1906 in Mahmudiyya, a small town in the Nile Delta. His father, a watch repairman who also served as prayer leader and Qur'anic teacher in the local mosque, had been educated at Al-Azhar. Author of a few works on Islamic jurisprudence, he instilled strong religious values into Al-Banna. Even as a primary school student, Al-Banna joined several religious societies dedicated to the promotion of Islamic standards of moral behavior. It was also at that young age that he became a member of the Hasafiyya Brothers' Sufi order. His early participation in dhikr circles and avid reading of Sufi literature help explain why he always saw the moral reform of the individual as a precondition to the Islamization of society.
In 1923, at the age of 16, Al-Banna moved to Cairo to enter the famous Dar al-'Ulum college. The four years that Al-Banna spent in Cairo exposed him to the political ferment of the Egyptian capital in the early 1920s, and enhanced his awareness of the extent to which secular and Western ways had penetrated the very fabric of society. It was then that Al-Banna became particularly preoccupied with what he saw as the young generation's drift away from Islam. He believed that the battle for the hearts and minds of the youth would prove critical to the survival of a religion besieged by a Western onslaught. While studying in Cairo, he immersed himself in the writings of the founders of Islamic reformism (the Salafiyya movement), including the Egyptian Muhammad 'Abduh (1849-1905), under whom his father had studied while at Al-Azhar. But it was 'Abduh's disciple, the Syrian Rashid Rida (1865-1935), who most influenced Al-Banna. Al-Banna was a dedicated reader of Al-Manar, the magazine that Rida published in Cairo from 1898 until his death in 1935. He shared Rida's central concern with the decline of Islamic civilization relative to the West. He too believed that this trend could be reversed only by returning to an unadulterated form of Islam, free from all the accretions that had diluted the strength of its original message. Like Rida at the end of his life — but unlike 'Abduh and other Islamic modernists — Al-Banna felt that the main danger to Islam's survival in the modern age stemmed less from the conservatism of Al-Azhar and the ulama (which he nevertheless criticized) than from the ascendancy of Western secular ideas.
Al-Banna urged the rejection of all Western notions, emphasizing instead the need to return to the foundations and original purity of Islam. Indeed, through the organizational skills he would soon demonstrate, Al-Banna did more than any other thinker during that time to contribute to the eclipse of Islamic refornism and modernism by Islamic fundamentalism. Upon graduating from Dar al-'Ulum in 1927, at the age of 21, Al-Banna was appointed as a teacher of Arabic in a primary school in Isma'iliyya. At the time, Isma'iliyya served as the capital of the British-occupied Canal Zone and hosted the headquarters of the Suez Canal Company (SCC). British military camps and the homes of the SCC's foreign employees were as much a part of this rapidly expanding new town as the wretched conditions in which the majority of the SCC's Egyptian workers lived. Al-Banna's first assignment thus heightened his resentment of what he saw as Egypt's military occupation, economic exploitation, cultural domination, and loss of dignity. It strengthened his determination to rid Egypt of British and, more generally, Western influences.From the moment he arrived in Isma'iliyya, Al-Banna involved himself actively in the life of the community. He made an effort to become acquainted with the town's notables while reaching out to the broadest possible public. He conducted night classes for his students' parents and led informal discussions in the mosque, coffeehouses, clubs, and private homes. His basic message was that Egypt had lost its soul; it had become politically sub-servient and economically dependent because it had strayed from the path that had been laid down by God. The only remedy to the decadence of state and society was to reassert Islamic values and ways of life.
It was to spread this message that Al-Banna launched the Society of the Muslim Brothers in March 1928. At first, the society was only one of the numerous small Islamic associations that existed at the time. Similar to those that Al-Banna himself had joined since he was 12, these associations aimed to promote personal piety and engaged in charitable activities. By the late 1930s, it had established branches in every Egyptian province. A decade later, it had 500,000 active members and as many sympathizers in Egypt alone, while its appeal was now felt in several other countries as well. The society's growth was particularly pronounced after Al-Banna relocated its headquarters to Cairo in 1932. The single most important factor that made this dramatic expansion possible was the organizational and ideological leadership provided by Al-Banna.
He endeavored to bring about the changes he hoped for through institution-building, relentless activism at the grassroots level, and a reliance on mass communication. He proceeded to build a complex mass movement that featured sophisticated governance structures; sections in charge of furthering the society's values among peasants, workers, and professionals; units entrusted with key functions, including propagation of the message, liaison with the Islamic world, and press and translation; and specialized committees for finances and legal affairs.
In anchoring this organization into Egyptian society, Al-Banna skillfully relied on pre-existing social networks, in particular those built around mosques, Islamic welfare associations, and neighborhood groups. This weaving of traditional ties into a distinctively modern structure was at the root of his success. Directly attached to the brotherhood, and feeding its expansion, were numerous businesses, clinics, and schools. In addition, members were affiliated to the movement through a series of cells, revealingly called usar (families). The material, social and psychological support thus provided were instrumental to the movement's ability to generate enormous loyalty among its members and to attract new recruits. The services and organizational structure around which the society was built were intended to enable individuals to reintegrate into a distinctly Islamic setting, shaped by the society's own principles.
Rooted in Islam, Al-Banna's message tackled issues including colonialism, public health, educational policy, natural resources management, Marxism, social inequalities, Arab nationalism, the weakness of the Islamic world on the international scene, and the growing conflict in Palestine. By emphasizing concerns that appealed to a variety of constituencies, Al-Banna was able to recruit from among a cross-section of Egyptian society — though modern-educated civil servants, office employees, and professionals remained dominant among the organization's activists and decisionmakers.
As the society expanded during the 1930s, it quickly changed from a movement for spiritual and moral reform into an organization directly active on the Egyptian political scene. Concurrent with that transformation, radical tendencies asserted themselves within the organization. A "secret apparatus" (al-jihaz al-sirri) was formed that engineered a series of assassinations of enemies of the brotherhood.
Between 1948 and 1949, shortly after the society sent volunteers to fight in the war in Palestine, the conflict between the monarchy and the society reached its climax. Concerned with the increasing assertiveness and popularity of the brotherhood, as well as with rumors that it was plotting a coup, Prime Minister Nuqrashi Pasha disbanded it in December 1948. The organization's assets were impounded and scores of its members sent to jail. Less than three weeks later, the prime minister was assassinated by a member of the brotherhood. This in turn prompted the murder of Al-Banna, presumably by a government agent, in February 1949, when Al-Banna was still only 43 and at the height of his career.
Though the society never fully recovered from the loss of its charismatic founder, it survived. Since then, the brotherhood has remained a significant force in the politics of several Arab countries, either directly or through the movements it inspired. It appeals most to cultural conservatives who want their government and society to reflect and defend certain basic Islamic values and principles, and who favor a pragmatic and incremental approach to achieve these goals. The legacy of Al-Banna is thus still present, and will continue to shape the destiny of Arab societies in the new millennium.