Tuesday, July 03, 2007

தடையை மீறி ஹிஜாப் பிரச்சாரம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தடைகளை தாண்டி ஹிஜாபிற்காக பிரச்சாரம்

"துருக்கியில் ஹிஜாப் என்பது வெறும் தலையை மறைக்கும் ஒரு துண்டு துணியல்ல, மாறாக அது ஒரு சமூக அரசியல் பிரச்சனையாக மாறிவிட்டது"-துருக்கியின் அரப் பத்திரிகையாளர் ரானியா ஷுஃபி கூறுகிறார்.இவர் துருக்கி முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பைப்பெற்றவர்.

துருக்கியில் அரசாங்கத்தின் கடுமையான தடையிருந்தும் ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.துருக்கியில் தற்ப்பொழுது 70% பெண்களும் பர்தா அணிகின்றார்கள்.

அரபு நாடுகள் பலவற்றிலும் ஹிஜாப் முஸ்லீம் பெண்கள் அணியும் ஒரு பாரம்பரிய ஆடையாக இருப்பதால் அதனை சிலர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அணியலாம்.ஆனால் துருக்கியின் நிலையோ வேறு.இங்கு ஹிஜாப் அணிந்தால் கைதுச்செய்யப்படலாம் அல்லது தண்டிக்கப்படலாம் என்ற கடுமையான நிலையிருந்தும் அந்தப்பெண்கள் ஹிஜாப் அணிவதையே விரும்புகிறார்கள்.

23 வயதுடைய ஃபாத்திமா கதானிகஷிற்கு ஹிஜாப் அணிந்ததால் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டது.அதனால் அவருக்கு வருத்தமில்லை."அதிகாரத்தை கையில் வைத்திருப்போருக்கு என்னுடைய பல்கலைகழக அனுமதியை வேண்டுமென்றால் மறுக்கலாம் ஆனல் என்னுடைய வாழ்க்கைப்பயணத்தை அவர்களால் தடைச்செய்யமுடியாது"என்கிறார் அவர்.

அரசாங்கத்தின் கடும் தடைக்காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் பல்கலை கழக கல்வி பயல்வது அஸர்பைஜான் போன்ற பக்கத்து நாடுகளில்.பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகானின் பெண்மக்கள் ஹ்ஜாப் காரணமாக கல்வி பயில்வது அமெரிக்காவில்.அவருடைய மனைவி தலைமறைப்பதற்குக்கூட அங்குள்ள ராணுவத்தலைமை எதிர்ப்புத்தெரிவிக்கிறது.

துர்க்கியில் இன்னொரு காட்சியையும் காணலாம் அது கல்விகூடங்களிலும் அலுவலகங்களிலும் வரும் பெண்கள் உள்ளேச்செல்லும்பொழுது ஹிஜாபைக்கழற்றிவிட்டுச்செல்வதும் வெளியே வரும்போது அணிவதும்தான்.இதனால் மதவிரோதிகளின் அனுதாபத்தையும் இவர்கள் பெற்றுவிட்டார்கள்.1997 பிப்ரவரி 28 அன்று நஜ்முதீன் அர்பகானின் ஆட்சியை கலைத்துவிட்டபிறகு ஹிஜாப் அணிவது துருக்கியில் அரசு அலுவலங்களிலும் கல்விக்கூடங்களிலும் தடைச்செய்யப்பட்டது.

No comments: